TNPSC Thervupettagam

கடல் போக்குவரத்து மதிப்பாய்வு 2023

October 4 , 2023 289 days 224 0
  •  “கடல் போக்குவரத்தின் மதிப்பாய்வு 2023” என்பது ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாட்டு அமைப்பினால் (UNCTAD) சமீபத்தில் வெளியிடப் பட்ட முதன்மை அறிக்கையாகும்.
  • கடல்சார் வர்த்தகம் ஆனது 2023 ஆம் ஆண்டில் 2.4 சதவீதமும் மற்றும் 2024 மற்றும் 2028 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 2 சதவீதத்திற்கு அதிகமாகவும் உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • உலகளாவிய மொத்த உமிழ்வில் 3% பங்கினைக் கொண்ட இந்தத் தொழில்துறையின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம், கடந்தப் பத்தாண்டுகளில் 20% அதிகரித்துள்ளது.
  • எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனில், இந்த உமிழ்வுகள் 2050 ஆம் ஆண்டில், 2008 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 130% அளவை எட்டும்.
  • 2023 ஆம் ஆண்டில் கடல்சார் போக்குவரத்துத் துறை 2.4% வளர்ச்சியடையும் என்று அறிக்கை கணித்துள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் கொள்கலன் வழியான வர்த்தகம் 1.2% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப் படுவதோடு மேலும் இத்துறையின் வளர்ச்சி 2024 மற்றும் 2028 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 3% ஆக இருக்கும்.
  • முழு கார்பன் நீக்க இலக்கினை அடைவதற்கு 2050 ஆம் ஆண்டிற்குள் 8 பில்லியன் டாலர் முதல் 28 பில்லியன் டாலர் வரையிலான வருடாந்திர முதலீடுகள் தேவைப்படும்.
  • முழுவதும் கார்பன் நடுநிலைத் தன்மை கொண்ட எரிபொருளுக்குத் தேவையான உள்கட்டமைப்புகளை நிறுவ சுமார் 28 பில்லியன் டாலர் முதல் 90 பில்லியன் டாலர் வரையிலான வருடாந்திர முதலீடுகள் தேவைப்படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்