கேரள மாநில அரசானது விமான நிலையங்களுடன் பல்வேறு இடங்களை இணைக்கச் செய்வதற்காக கடல் வழி விமானசஜ் சேவையை தொடங்கியுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முக்கிய நீர்நிலைகளைச் சுற்றி நீர்நிலை விமான நிலையங்கள் அமைக்கப்படலாம்.
கடல் வழி விமானச் சேவையானது, பிராந்திய விமானச் சேவை இணைப்பு (RCS)-UDAN திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.
இது கேரளாவின் நான்கு விமான நிலையங்கள் மற்றும் உப்பங்கழிகள் வழியாக ஒரு மானியக் கட்டணத்துடன் விமானச் சேவை இணைப்பை நன்கு மேம்படுத்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் ஒரு சோதனை ஓட்டம் கொச்சி ஏரியில் உள்ள போல்காட்டி நீர் நிலையத்தில் இருந்து மூணாறில் உள்ள மாட்டுப்பட்டி அணைக்கு மேற்கொள்ளப் பட்டது.