ஆர்க்டிக் பகுதியில் காணப்படும் நார்வால்கள் /கொம்பன் என்ற வகை திமிங்கலங்கள் வேட்டையாடுவதற்குத் தங்கள் தந்தங்களைப் பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்து காட்சிகளை முதன்முறையாக கனடாவின் அறிவியலாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
நார்வால் (மோனோடான் மோனோசெரோஸ்) தொலைதூர ஆர்க்டிக் கடல் பகுதிகளில் வாழ்கின்றன.
ஆண் திமிங்கலங்கள் ஆனது, அவற்றின் நீண்ட, சுழல் வடிவத் தந்தங்களுக்குப் பெயர் பெற்றவை. இது உண்மையில் அவற்றின் நீட்சியடைந்த பற்களாகும்.