அமெரிக்காவின் அலாஸ்காவில் ஏறத்தாழ 4 மில்லியன் வட துருவக் கடற்பறவைகள் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட 'தி ப்ளாப்' என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு கடல் வெப்ப அலையால் உயிரிழந்துள்ளன.
'தி ப்ளாப்' என்ற இந்நிகழ்வானது, 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரையில் வடகிழக்குப் பசிபிக் பெருங்கடலில் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலை கொண்ட மேற்பரப்பு நீர் காணப்படும் நிகழ்வாகும்.
இது கலிபோர்னியா முதல் அலாஸ்கா வரையிலான கடல் சூழலியல் அமைப்புகளை பாதித்தது.
இங்குமிதவை உயிரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது, இதன் காரணமாக, இந்தப் பறவைகளின் மிகவும் முதன்மை உணவு ஆதாரமான மீன் வளங்களின் எண்ணிக்கை குறைந்தது.
ஐரோப்பாவில் கில்லெமோட்ஸ் என்று அழைக்கப் படும் இந்தப் பறவைகள், பறக்கும் பெங்குவின் போன்று தோற்றமளிக்கும் கடற்பறவைகள் ஆகும்.