1925 ஆம் ஆண்டு முதல் 1954 ஆம் ஆண்டு வரையிலான காலத்துடன் ஒப்பிடப்படும்போது, 2016 ஆம் ஆண்டுடன் முடிவடைந்த கடந்த முப்பது ஆண்டுகளில் வெப்பக் காற்று தினங்களின் எண்ணிக்கையானது 50 சதவிகிதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.
வெப்பக் காற்று அதிகரித்ததால் கடற்பாசி வகைக் காடுகள், கடற்புல் சமவெளிகள் மற்றும் பவளப் பாறைகள் ஆகியவை அழிந்துள்ளன.
வெப்பக் காற்று காட்டூத் தீயையும் ஏற்படுத்துகிறது. அது காட்டின் பெரும் பகுதியை அழித்து விடுகின்றது.
2011 ஆம் ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு அருகில் 10 வாரங்கள் நீடித்த கடல் வெப்பக் காற்றானது சுற்றுச்சூழலை முழுவதுமாக அழித்தது. மேலும் இது வணிக மீன் இனங்களை குளிர்ந்த நீரோட்டத்திற்குள் நிரந்தரமாகத் தள்ளியது.