மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அனுப்பிரியா படேல் அவர்கள் சமீபத்தில் கொல்கத்தாவில் இந்திய சர்வதேச கடல்சார் உணவுக் கண்காட்சியினைத் தொடங்கி வைத்தார்.
2025 ஆம் ஆண்டிற்குள் 14 பில்லியன் டாலர் என்ற இலட்சிய ஏற்றுமதி இலக்கை அடைவதற்காக இந்தியாவின் கடல்சார் உணவுத் தொழில்துறைகள் தனது உத்தியை மாற்றியமைத்து வருகிறது.
2021-22 ஆம் ஆண்டில், நாட்டின் கடல்சார் உணவு ஏற்றுமதி 7.76 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
இது மொத்த வேளாண் பொருட்களின் ஏற்றுமதியில் 17% ஆகும்.
தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பாதுகாப்பான கடல்சார் உணவுப் பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.
2022 ஆம் நிதியாண்டில் 7.76 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தியாவின் கடல்சார் உணவு ஏற்றுமதியில் 43 சதவீதப் பங்கினை அமெரிக்கா கொண்டுள்ளது.