TNPSC Thervupettagam

கடல்சார் உணவுப்பொருட்களின் அதிக ஏற்றுமதி

June 20 , 2023 523 days 331 0
  • 2022-23 ஆம் ஆண்டில், இந்தியாவின் கடல்சார் உணவுப் பொருட்களின் ஏற்றுமதியானது, அளவு மற்றும் மதிப்பு ஆகிய இரண்டின் அடிப்படையிலும், முன்பு எப்போதும் இல்லாத அளவிலான உயர்வினை எட்டியுள்ளது.
  • இந்த நிதியாண்டில் ரூ.63,969.14 கோடி (8.09 பில்லியன் டாலர்) மதிப்பிலான 1.7 மில்லியன் டன் கடல்சார் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.
  • இது 2021-22 ஆம் ஆண்டில் அளவின் அடிப்படையில் 26.73 சதவீதமும் அதன் மதிப்பின் அடிப்படையில் 4.31 சதவீதமும் அதிகரித்துள்ளது.
  • பதப்படுத்தப்பட்ட இறால், மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஏற்றுமதிப் பொருளாக தன் நிலையைத் தக்க வைத்துக் கொண்டது.
  • பதப்படுத்தப்பட்ட மீன், அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட இரண்டாவது பொருளாகும்.
  • அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இந்திய கடல்சார் உணவுப் பொருட்களுக்கான முக்கியச் சந்தைகளாக விளங்குகின்றன.
  • தென்கிழக்கு ஆசியா நான்காவது பெரியச் சந்தையாக விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்