தமிழகத்தில் கடல்சார் உயர்நிலைப் படையின் இரண்டுப் பிரிவுகளானது நிறுவப்பட உள்ளது.
இது குறிப்பாக மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் மற்றும் பாக் நீர்சந்தி பகுதிகளில் வாழும் கடல் உயிரினங்கள் கடத்தப்படுதல் மற்றும் அவை வேட்டையாடப் படுவதைத் தடுத்தல் உள்ளிட்ட கடல்சார் உயிரினங்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்ப்பதற்காக நிறுவப்பட உள்ளது.
கடல் பகுதிகளின் பாதுகாப்பு மற்றும் நிலையான மேலாண்மை ஆகியவற்றை வலுப் படுத்துவதும் கடல் மற்றும் கடலோரப் பகுதியில் வாழும் உயிரினங்களைப் பாதிக்கும் பேரழிவுகளைக் கண்காணிப்பதுமே இதன் முதன்மை நோக்கமாகும்.