2023-37 ஆம் ஆண்டு கடல்சார் உள்கட்டமைப்பு முன்னோக்குத் திட்டம் (MIPP) ஆனது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்தத் திட்டமானது, அடுத்த 15 ஆண்டுகளில் கடற்படையின் உள்கட்டமைப்புத் தேவைகளை முறைப்படுத்தி ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டமானது பிரதான் மந்திரி கதி சக்தி திட்டம், பேரிடர் தாங்கும் தன்மை மற்றும் நிகரச் சுழிய உமிழ்வு நிலைக்கு மாறுதல் போன்றவற்றின் ஒரு பரந்தக் கொள்கை வழிமுறைகளுக்கு இணங்கும் வகையில் அமைந்துள்ளது.