TNPSC Thervupettagam

கடல்சார் கள விழிப்புணர்விற்கான இந்திய-பசிபிக் கூட்டாண்மை (IPMDA)

November 19 , 2023 372 days 300 0
  • இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் (IOR) பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மையை உறுதி செய்வதில் IPMDA போன்ற வலையமைப்புகள் மற்றும் கூட்டாண்மைகளை உருவாக்குவது ஒரு முக்கிய செயற்கருவியாக இருக்கும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு டோக்கியோ உச்சிமாநாட்டில் குவாட் நாடுகளின் குழுவானது (இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா) IPMDA கூட்டாண்மையினை அறிமுகப்படுத்தியது.
  • இது “அடையாள மறைப்பு கப்பல் போக்குவரத்தை (dark shipping)” கண்காணிக்கச் செய்வதையும், பங்குதார நாடுகளின் நீர்நிலைகளின் விரிவான மற்றும் துல்லியமான நிகழ்நேர கடல்சார் மதிப்பாய்வு வினை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இது பசிபிக் தீவுகள், தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள இந்தியப் பெருங்கடல் பகுதி (IOR) ஆகியவற்றை ஒருங்கிணைப்பதில் பெரும் கவனம் செலுத்துகிறது.
  • அடையாள மறைப்பு கப்பல் போக்குவரத்து என்பது அதன் தானியங்கி அடையாள அமைப்பினை (AIS) நிறுத்திய நிலையில் இயங்கும் கப்பலை விவரிக்கப் பயன்படுத்தப் படும் சொல் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்