TNPSC Thervupettagam

கடல்சார் சுற்றுச்சூழல்

April 27 , 2019 1911 days 575 0
  • அமெரிக்காவில் உள்ள ருட்கர்ஸ் பல்கலைக் கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வானது ஆண்டின் வெப்பமான காலங்களின் போது ஒவ்வொரு உயிரினத்திற்கும் தேவைப்படும் குளிர்ந்த வெப்ப நிலையைக் கணித்துள்ளது.
  • இது தரையில் வாழும் உயிரினங்களை விட கடல்வாழ் உயிரினங்கள் புவி வெப்பமடைதல் காரணமாக இரண்டு மடங்கிற்கும் மேல் அழிக்கப் படுவதைக் கண்டறிந்துள்ளது.
  • வெப்பத்திலிருந்துத் தப்பிப்பதற்காக நிலத்தில் வாழும் உயிரினங்கள் காடுகள், நிழல் உள்ள பகுதிகள் அல்லது நிலத்துக்கு அடியில் உள்ள பகுதிகள் ஆகியவற்றில் பதுங்கிக் கொள்கின்றன. ஆனால் கடலில் வாழும் உயிரினங்களுக்கு வெப்பத்திலிருந்து தப்பிப்பதற்கான வழிகள் எதுவும் இல்லை.
  • கடல் உயிரினங்களின் மீதான மிக அதிக அளவிலான பாதிப்பானது உணவு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்காக மீன் மற்றும் மட்டிகள் ஆகியவற்றை நம்பியிருக்கும் மனிதச் சமூகத்தை மிகவும் பாதிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்