கடல்சார் பகுதியில் மேகங்களின் ஒளி திருப்புதல் திறனை மேம்படுத்துதல்
May 7 , 2024 201 days 215 0
மேகங்களைத் தூண்டுவித்து, சூரிய ஒளியை மீண்டும் விண்வெளியில் பிரதிபலிக்கச் செய்வதற்காக (திருப்புவதற்காக) வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் முதலாவது வெளிப்புறச் சோதனையை அறிவியலாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இந்த புவியியல் சார் பொறியியல் நுட்பம் ஆனது கடல்சார் பகுதியில் மேகங்களின் ஒளி திருப்புதல் திறனை மேம்படுத்துதல் எனப்படுகிறது.
இது புவியின் அதிகரித்து வரும் வெப்பநிலையைத் தணிக்கக் கூடியதாக உள்ளது.
இந்தப் புவியியல் சார் பொறியியல் நுட்பமானது கடல் உப்பு அல்லது மற்ற தூசுப் படலங்கள் (வளிமக் கரைசல்) போன்ற சிறிய துகள்களைக் கடலின் மேற்புறத்திருந்து வளிமண்டலத்தில் தெளிக்கும் செயல்முறையினை உள்ளடக்கியது.
இந்தத் துகள்கள் மேக ஒடுக்கக் கருக்களாகச் செயல்பட்டு, ஏற்கனவே இருக்கும் மேகங்களுக்குள் அதிக எண்ணிக்கையிலான, ஆனால் சிறு சிறு நீர்த்துளிகள் உருவாவதை அதிகரிக்கின்றன.
இதன் விளைவாக, மேகங்கள் மிகவும் பிரகாசமாகவும் அதிக பிரதிபலிப்புத் திறன் கொண்டதாகவும் மாறும் இதனால் அவற்றின் ஒளி திருப்புதல் திறன்- சூரிய ஒளியை மீண்டும் விண்வெளியில் பிரதிபலிக்கும் திறன் - ஆனது மிகவும் திறம் மிக்க முறையில் அதிகரிக்கிறது.