TNPSC Thervupettagam

கடல்சார் பகுதியில் மேகங்களின் ஒளி திருப்புதல் திறனை மேம்படுத்துதல்

May 7 , 2024 201 days 214 0
  • மேகங்களைத் தூண்டுவித்து, சூரிய ஒளியை மீண்டும் விண்வெளியில் பிரதிபலிக்கச் செய்வதற்காக (திருப்புவதற்காக) வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் முதலாவது வெளிப்புறச் சோதனையை அறிவியலாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.
  • இந்த புவியியல் சார் பொறியியல் நுட்பம் ஆனது கடல்சார் பகுதியில் மேகங்களின் ஒளி திருப்புதல் திறனை மேம்படுத்துதல் எனப்படுகிறது.
  • இது புவியின் அதிகரித்து வரும் வெப்பநிலையைத் தணிக்கக் கூடியதாக உள்ளது.
  • இந்தப் புவியியல் சார் பொறியியல் நுட்பமானது கடல் உப்பு அல்லது மற்ற தூசுப் படலங்கள் (வளிமக் கரைசல்) போன்ற சிறிய துகள்களைக் கடலின் மேற்புறத்திருந்து வளிமண்டலத்தில் தெளிக்கும் செயல்முறையினை உள்ளடக்கியது.
  • இந்தத் துகள்கள் மேக ஒடுக்கக் கருக்களாகச் செயல்பட்டு, ஏற்கனவே இருக்கும் மேகங்களுக்குள் அதிக எண்ணிக்கையிலான, ஆனால் சிறு சிறு நீர்த்துளிகள் உருவாவதை அதிகரிக்கின்றன.
  • இதன் விளைவாக, மேகங்கள் மிகவும் பிரகாசமாகவும் அதிக பிரதிபலிப்புத் திறன் கொண்டதாகவும் மாறும் இதனால் அவற்றின் ஒளி திருப்புதல் திறன்- சூரிய ஒளியை மீண்டும் விண்வெளியில் பிரதிபலிக்கும் திறன் - ஆனது மிகவும் திறம் மிக்க முறையில் அதிகரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்