TNPSC Thervupettagam

கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி

July 9 , 2022 742 days 373 0
  • 2021-22 ஆம் நிதியாண்டில், 7.76 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 13,69,264 மெட்ரிக் டன் கடல்சார் உணவுகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
  • ஏற்றுமதியானது ரூபாய் மதிப்பில் 31.71 சதவீதமும், அமெரிக்க டாலர் மதிப்பில் 30.26 சதவீதமும் மற்றும் அளவு அடிப்படையில் 19.12 சதவீதமும் உயர்ந்துள்ளது.
  • உறைந்த இறால் ஆனது அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் முக்கிய ஏற்றுமதிப் பொருளாக இருந்தது.
  • உறைந்த இறால் இறக்குமதி  செய்யும் நாடுகளுக்கான இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து சீனா, ஐரோப்பிய ஒன்றியம், தென்கிழக்கு ஆசியா, ஜப்பான் மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்