TNPSC Thervupettagam

கடல்சார் போக்குவரத்து 2023

February 27 , 2024 143 days 211 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாட்டு (UNCTAD) அமைப்பானது 2023 ஆம் ஆண்டிற்கான கடல்சார் போக்குவரத்து மதிப்பாய்வினை வெளியிட்டுள்ளது.
  • சர்வதேசக் கப்பல் போக்குவரத்து மூலமான பசுமை இல்ல வாயு (GHG) வெளியேற்றம் ஆனது ஒரு தசாப்தத்திற்கு முன்பு இருந்ததை விட 2023 ஆம் ஆண்டில் 20% அதிகமாக இருந்தது.
  • கப்பல் போக்குவரத்துத் துறையானது உலகின் வர்த்தகத்தில் சுமார் 80% பங்கினைக் கொண்டுள்ளதோடு, உலகளாவிய GHG வாயு உமிழ்வுகளில் சுமார் 3% பங்கினை அளிக்கிறது.
  • உலகளாவியக் கப்பல்களில் 8 சதவீதக் கப்பல்கள் கனரக எரிபொருள் எண்ணெய், மித ரக எரிபொருள் எண்ணெய் மற்றும் டீசல்/எரிவாயு எண்ணெய் போன்ற வழக்கமான எரிபொருட்களைப் பயன்படுத்துகின்றன.
  • 1.2% கப்பல்கள் மட்டுமே LNG, LPG, மெத்தனால், மற்றும் குறைந்த அளவில் மின் கலம் / கலப்பு எரிபொருள் போன்ற மாற்று எரிபொருள்களைப் பயன்படுத்துகின்றன.
  • கொள்கலன் ஏற்றுக் கப்பல் வர்த்தகம் ஆனது 2023 ஆம் ஆண்டில் 1.2 சதவீதமும், 2024-2028 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் சுமார் 3 சதவீதமும் வளரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தக அளவுகளில் 2022 ஆம் ஆண்டில் அதீத வளர்ச்சிப் பதிவானது.
  • 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில், வணிகக் கப்பல்கள் சராசரியாக 22.2 ஆண்டுகள் பழமையானவையாகவும், உலகின் பாதிக்கும் மேற்பட்ட கப்பல்கள் 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ரீதியில் பழமையானவையாகவும் இருந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்