20வது கடல்சார் மாநில மேம்பாட்டு சபை (MSDC) கூட்டத்தில் இந்தியச் சர்வதேச கடல்சார் சர்ச்சை தீர்வு மையம் (IIMDRC) ஆனது தொடங்கப்பட்டது.
இந்திய கடல்சார் மையம் (IMC) எனப்படும் கொள்கை சார்ந்த கருத்துக்களை வழங்கும் சிந்தனைக் குழுவும் இந்த நிகழ்வில் தொடங்கப்பட்டது.
IIMRDC ஆனது ஒரு சிறப்புத் தளமாகச் செயல்படுவதோடு, கடல்சார் விவகாரங்கள் சார்ந்த சர்ச்சைகளுக்குத் திறம்படத் தீர்ப்பதற்கு, தகுதி அடிப்படையிலான மற்றும் தொழில்துறை சார்ந்த தீர்வுகளை வழங்கும்.
கடல் சார் பரிவர்த்தனைகளின் பல் நோக்கு, பல தரப்பு ஒப்பந்தங்கள், பல அதிகார வரம்புகள் சார்ந்த மற்றும் பல தேசிய இயல்புகளை அனுசரிக்கவும் இது உதவும்.