இந்தியாவின் கடல்பரப்புப் பகுதிகளில் உள்ள கனிமத் தொகுதிகளின் முதல் ஏலத்தை சுரங்க அமைச்சகம் தொடங்கியது.
இந்த முன்னெடுப்பானது வளங்கள் மேம்பாட்டிற்காக இந்திய நாட்டின் பிராந்திய நீர் நிலைகள், கண்டத் திட்டு, பிரத்தியேகப் பொருளாதார மண்டலம் (EEZ) மற்றும் பிற கடல்சார் மண்டலங்களை ஏலத்திற்குத் திறந்து வைத்துள்ளது.
இந்த ஏலத்தின் முதலாவது தவணையானது அரபிக் கடல் மற்றும் அந்தமான் கடலில் இருந்து உத்தி சார் ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 13 கனிமத் தொகுதிகள் இடம் பெறும்.
சுமார் 2 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்தியாவின் EEZ ஆனது, கோபால்ட், நிக்கல், அருமண் தனிமங்கள் (REE) மற்றும் பல் கனிம முடிச்சுகள் போன்ற முக்கிய கனிமப் பொருட்கள் உட்பட, தோண்டி எடுக்கப்படாத பல கனிம இருப்புக்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.