கடல்வழி சரக்குப் போக்குவரத்து தொடர்பான மசோதா, 2024
April 1 , 2025 10 hrs 0 min 53 0
2024 ஆம் ஆண்டு கடல் வழி சரக்குப் போக்குவரத்து மசோதாவானது அவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதாவானது 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 09 ஆம் தேதியன்று மக்களவையில் அறிமுகப் படுத்தப்பட்டது.
இது 1925 ஆம் ஆண்டு இந்தியப் பொருட்களின் கடல் வழி சரக்குப் போக்குவரத்துச் சட்டத்தினை மாற்றியமைக்க முயல்கிறது.
இது இந்தியாவில் உள்ள ஒரு துறைமுகத்திலிருந்து வேறு அல்லது உலகின் வேறு எந்த துறைமுகத்திற்கும் கொண்டு செல்லப்படும் பொருட்களின் மீதான பொறுப்புகள், கடமைகள், உரிமைகள் மற்றும் விலக்குகளை நிறுவுகிறது.
இந்தச் சட்டம் ஆனது 1924 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட கப்பல் சரக்கு ஏற்றுப் பட்டியல் (ஹேக் விதிகள்) தொடர்பான விதிகள் மற்றும் அதன் பின்னர் செய்யப் பட்ட திருத்தங்கள் தொடர்பான சில சட்ட விதிகளை ஒன்றிணைப்பதற்கான சர்வதேச உடன்படிக்கைக்கு இணங்க உள்ளது.
இந்தப் புதிய மசோதாவானது, பழையச் சட்டத்தின் அனைத்து விதிகளையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.