ஆர்டன் கேபிட்டல் என்ற அமைப்பானது 2023 ஆம் ஆண்டிற்கான கடவுச் சீட்டுக் குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
இது 199 நாடுகளின் கடவுச் சீட்டுகளைத் தர வரிசைப் படுத்துகிறது.
முன்னதாக இதில் 138வது இடத்தில் இருந்த இந்தியா 6 இடங்கள் சரிந்து 2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்திரக் கடவுச் சீட்டுக் குறியீட்டில் 144வது இடத்தினைப் பெற்றது.
அதன் தற்போதைய தரவரிசைப்படி, இந்தியர்கள் 21 நாடுகளுக்கு நுழைவு இசைவுச் சீட்டு இல்லாமல் பயணம் செய்யவும், 128 நாடுகளுக்கு நுழைவு இசைவுச் சீட்டு அனுமதியுடனும் பயணம் செய்யலாம் என்பதோடு, 47 நாடுகளில் வருகைக்குப் பிறகு நுழைவு இசைவுச் சீட்டு பெறும் ஒரு வாய்ப்பினையும் பெறலாம்.
இந்த ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகமானது (UAE) அதிக இடம் பெயர்வு மதிப்பினைப் பெற்று, முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து ஸ்வீடன், ஜெர்மனி, பின்லாந்து, லக்ஸம்பர்க், ஸ்பெயின், பிரான்சு, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகள் உள்ளன.
ஆசியாவில், தென் கொரியா அதிக மதிப்பெண் பெற்று இப்பட்டியலில் 12வது இடத்தில் உள்ளது.