விசாகப்பட்டினம் வாயுக் கசிவு குறித்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆணையானது “கடுமையான பொறுப்புடைமை” என்ற சட்டக் கொள்கையின் கீழ் LG பாலிமர்ஸ் நிறுவனத்தை ஒரு முதன்மைப் பொறுப்பு கொண்ட நிறுவனமாக மாற்றியுள்ளது.
இந்தப் பொறுப்புடைமையானது 1986 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தினால் இந்தியாவில் கொண்டு வரப்பட்ட ஒரு முக்கியமான அம்சம் ஆகும்.
1986 ஆம் ஆண்டில், இந்திய உச்ச நீதிமன்றமானது தில்லி ஓலியம் வாயுக் கசிவு வழக்கில் “அறுதி பொறுப்புடைமைக் கொள்கை” என்பதற்குப் பதிலாக இதனை மாற்றியுள்ளது.
இந்த அறுதிப் பொறுப்புடைமைக் கொள்கையானது சரத்து 21-ன் (வாழ்வதற்கான உரிமை) ஒரு பகுதியாகும்.
“கடுமையான பொறுப்புடைமைக் கொள்கை” என்பதின் கீழ், அபாயகரமான பொருள்கள் விபத்தாலோ அல்லது இதர சூழ்நிலைகளின் கீழ் இயற்கையின் ஒரு செயலாலோ அந்த நிறுவனத்தின் வரம்பிற்கு வெளியே சென்றால், அந்த நிறுவனம் இந்த நிகழ்விற்குப் பொறுப்பாகாது. இந்த நிகழ்விற்கு வேண்டி அந்த நிறுவனம் எந்தவொரு இழப்பீட்டையும் வழங்க வேண்டியதில்லை.