இரண்டு அல்லது மூன்று நாட்கள் நடைபெறும் அந்தோணி தேவாலயத் திருவிழாவானது 2019 ஆம் ஆண்டு மார்ச் 15 அன்று தொடங்கியது.
சமீப காலங்களில் முதன்முறையாக, இத்திருவிழாவிற்காக “வல்லம்” என்ற நாட்டுப் படகுகளில் பயணிப்பதற்கு உள்ளூரின் மரபார்ந்த மற்றும் நாட்டுப் படகு மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுபற்றி
அந்தோணி தேவாலயம் என்பது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் கடல் எல்லையில் அமைந்த வழிபாட்டிற்கான ஒரு தனித்துவ இடமாகும். மேலும் இது இலங்கையால் புனிதத் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சத்தீவிற்கு பயணிப்பதற்கு எந்தவொரு நபரும் இந்தியக் கடவுச் சீட்டு அல்லது இலங்கை நுழைவு இசைவு வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
அந்தோணி கத்தோலிக்க தேவாலயமானது 100 ஆண்டு பழமையான மரபினைக் கொண்டுள்ளது.
இது 1905 ஆம் ஆண்டில் மீனவர்களின் பாதுகாவலராக அறியப்படும் பதுவா அந்தோணிக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இது இந்திய கத்தோலிக்கரான (தமிழர்) சீனிவாச படையாச்சியால் கட்டமைக்கப்பட்டது.
கட்சத்தீவு என்பது இலங்கையின் கடற்பகுதியில் அமைந்துள்ள 285 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட (1.15 கிலோமீட்டர்) ஒரு சர்ச்சைக்குரிய குடியேற்றமில்லாத தீவாகும்.
இந்தத் தீவானது 1974 ஆம் ஆண்டில் அப்போதைய இந்தியப் பிரதமரான இந்திரா காந்தியால் இலங்கைக்கு வழங்கப்படும் வரை இது இந்தியாவின் வசம் இருந்தது.