TNPSC Thervupettagam

கட்டாய உயர் அழுத்த உயிரி எரிவாயு கலப்பு நிர்ணயம்

December 1 , 2023 233 days 185 0
  • உயர் அழுத்தத்தில் நிரப்பப்பட்ட உயிரி எரிவாயுவை (CBG) நகர எரிவாயு விநியோகம் (CGD) துறையின் போக்குவரத்து மற்றும் உள்நாட்டுப் பிரிவுகளில் படிப்படியாக கட்டாயமாகக் கலப்பு செய்வதற்கான செயல் திட்டத்தினை மத்திய அரசு அறிவித்து உள்ளது.
  • இந்த முடிவானது, உயர் அழுத்தத்தில் நிரப்பப்பட்ட உயிரி எரிவாயுவின் உற்பத்தி மற்றும் நுகர்வை அதிகரிக்கும் என்று அரசு எதிர்பார்த்துள்ளது.
  • மொத்த உயர் அழுத்தத்தில் நிரப்பப்பட்ட இயற்கை எரிவாயு மற்றும் உள்நாட்டு குழாய் வழி இயற்கை எரிவாயு நுகர்வில் 2026 ஆம் நிதியாண்டிற்கு 1 சதவிகிதம், 2027 ஆம் நிதியாண்டிற்கு 3 சதவிகிதம் மற்றும் 2028 ஆம் நிதியாண்டிற்கு 4 சதவிகிதமும் என்ற விகிதத்தில் கட்டாயக் கலப்பு விகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • 2029 ஆம் நிதியாண்டிலிருந்து 5 சதவிகிதம் கலப்பு விகிதம் கட்டாயமாக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்