TNPSC Thervupettagam

கட்டாய வெகுஜன மதமாற்றத்திற்கு எதிரான மசோதா

August 15 , 2022 706 days 378 0
  • இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் ஆனது 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதியன்று "வெகுஜன மதமாற்றத்தை" தடை செய்யும் ஒரு மசோதாவை நிறைவேற்றியது.
  • 2022 ஆம் ஆண்டு இமாச்சல பிரதேசச் சமயச் சுதந்திரத் திருத்த மசோதாவானது ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
  • அதன் 2019 ஆம் ஆண்டு சட்டத்தில் குறிப்பிடப்பட்டக் கட்டாயப்படுத்துதல் அல்லது ஈர்ப்பு நடவடிக்கைகள் மூலம் மதம் மாறுவதற்கு எதிராக, அதிகபட்சத் தண்டனையை இந்த மசோதா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையாக உயர்த்துகிறது.
  • 2019 ஆம் ஆண்டு சட்டத்தில் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மதமாற்றம் செய்வதைக் குறிப்பிடும் "வெகுஜன மதமாற்றம்" என்ற குறிப்பை இந்த மசோதா உட்சேர்த்தது.
  • கட்டாய மதமாற்றங்களுக்கானத் தண்டனையை ஏழு ஆண்டுகளில் இருந்து அதிக பட்சமாக 10 ஆண்டுகளாக அதிகரிக்க இந்த மசோதா முன்மொழிகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்