TNPSC Thervupettagam

கட்டாயக் குறைந்தபட்ச தண்டனை

February 2 , 2023 662 days 400 0
  • 12 வயதுக்குட்பட்ட சிறுமியைக் கூட்டுப் பலாத்காரம் செய்த குற்றத்திற்கு விதிக்கப் படும் கட்டாயக் குறைந்தபட்சத் தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட ஒரு மனுவை விசாரிக்க இந்தியத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முடிவு செய்துள்ளது.
  • கட்டாயக் குறைந்தபட்சத் தண்டனை என்பது "நீதிமன்றத்திற்கு எந்த விருப்புரிமையும் இல்லாமல் விதிக்கப்பட வேண்டிய தண்டனை" என்பதைக் குறிக்கிறது.
  • குற்றவாளியின் எஞ்சிய ஆயுள்காலம் வரையிலான ஆயுள் தண்டனை மற்றும் மரணத் தண்டனை என்ற ‘குறைந்தபட்சக் கட்டாயத் தண்டனையை’ இது குறிக்கிறது.
  • இந்தக் கருத்தாக்கமானது முதன்மையாக கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் சட்ட அமைப்புகளில் இருந்து பெறப்பட்டது.
  • இந்தியாவில், பாலியல் துன்புறுத்தல் குற்றத்தைத் தவிர, குழந்தைகள் மீதான பாலியல் குற்ற (POCSO) தடுப்புச் சட்டத்தின் கீழ் அனைத்துப் பாலியல் குற்றங்களுக்கும் இத்தகையத் தண்டனைகள் பரிந்துரைக்கப் படுகின்றன.
  • POCSO சட்டத்தின் 8வது பிரிவின் கீழ், குழந்தைகள்  மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்களைக் கையாளும் 7வது பிரிவின் கீழ் அந்தக் குற்றங்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.
  • 1983 ஆம் ஆண்டின் குற்றவியல் சட்டத் திருத்தச் சட்டம் தான் 'கட்டாயக் குறைந்த பட்சத் தண்டனை' பரிந்துரைக்கப் பட்டதற்கான முதல் நிகழ்வாகும்.
  • பலாத்காரத்திற்கு ஏழு ஆண்டுகளும், 12 வயதுக்குட்பட்ட சிறார்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு போன்ற மிக கொடூரமான வழக்குகளுக்குப் பத்து வருடங்களும் குறைந்த பட்சத் தண்டனை என்று இந்தச் சட்டம் கூறுகிறது.
  • இதில் இரு குற்றங்களுக்கும் அதிகபட்சத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனையாக 14 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டது.
  • 2013 ஆம் ஆண்டு சீர்திருத்தங்கள், குற்றவாளியின் வாழ்நாள் முழுவதையும் குறிக்கும் வகையில் ‘ஆயுள் சிறைத் தண்டனை’ என்ற வரையறையைப் புதுப்பித்து, கூட்டுப் பலாத்காரத்திற்கான குறைந்தபட்சத் தண்டனையாக 20 ஆண்டுகள் தண்டனையை அறிமுகப் படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்