TNPSC Thervupettagam

கட்டாயத் தேர்ச்சிக் கொள்கை

December 25 , 2024 16 hrs 0 min 49 0
  • மத்திய அரசானது, தன்னால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் கட்டாயத் தேர்ச்சிக் கொள்கையினை ரத்து செய்துள்ளது.
  • இதில் கேந்திரிய வித்யாலயாக்கள் மற்றும் ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் அடங்கும்.
  • இது ஆண்டு இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 5 மற்றும் 8 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களை அதே வகுப்பில் நிறுத்தி வைக்க வழிவகுக்கிறது.
  • 2009 ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டமானது 2019 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது என்ற நிலையில் இது 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் உள்ள குழந்தைகளுக்கானக் கட்டாயத் தேர்ச்சி முறை குறித்து "பொருத்தமான அரசாங்கம்" முடிவு செய்ய வழி வகுக்கும் என்ற ஒரு விதியைச் சேர்த்தது.
  • பள்ளிக் கல்வி என்பது மாநிலப் பட்டியலில் அடங்கும் என்பதால், மாநில அரசுகள் இது தொடர்பாக முடிவெடுக்கலாம்.
  • ஏற்கனவே 16 மாநிலங்கள் மற்றும் டெல்லி உட்பட 2 ஒன்றியப் பிரதேசங்கள் இந்த இரண்டு வகுப்பினருக்கும் கட்டாயத் தேர்ச்சிக் கொள்கையினை ரத்து செய்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்