மத்திய அரசானது, தன்னால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் கட்டாயத் தேர்ச்சிக் கொள்கையினை ரத்து செய்துள்ளது.
இதில் கேந்திரிய வித்யாலயாக்கள் மற்றும் ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் அடங்கும்.
இது ஆண்டு இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 5 மற்றும் 8 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களை அதே வகுப்பில் நிறுத்தி வைக்க வழிவகுக்கிறது.
2009 ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டமானது 2019 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது என்ற நிலையில் இது 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் உள்ள குழந்தைகளுக்கானக் கட்டாயத் தேர்ச்சி முறை குறித்து "பொருத்தமான அரசாங்கம்" முடிவு செய்ய வழி வகுக்கும் என்ற ஒரு விதியைச் சேர்த்தது.
பள்ளிக் கல்வி என்பது மாநிலப் பட்டியலில் அடங்கும் என்பதால், மாநில அரசுகள் இது தொடர்பாக முடிவெடுக்கலாம்.
ஏற்கனவே 16 மாநிலங்கள் மற்றும் டெல்லி உட்பட 2 ஒன்றியப் பிரதேசங்கள் இந்த இரண்டு வகுப்பினருக்கும் கட்டாயத் தேர்ச்சிக் கொள்கையினை ரத்து செய்துள்ளன.