கட்டுப்படுத்தப்பட்ட சூழலிலான மனிதத் தொற்று ஆய்வுகள்
July 28 , 2023 360 days 186 0
இந்திய மருத்துவ ஆராய்ச்சிச் சபையானது (ICMR), நன்கு கட்டுப்படுத்தப்பட்ட ஒரு சூழ்நிலையிலான மனிதத் தொற்று ஆய்வுகளை (CHIS) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தப் புதுமைமிக்க ஒரு ஆராய்ச்சி மாதிரியானது உடல் ஆரோக்கியமான பல்வேறு தன்னார்வலர்களைக் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் நோய்க்கிருமிகளின் தாக்கத்திற்கு உட்படுத்துகிறது.
CHIS என்பது கட்டுப்படுத்தப்பட்ட மனிதத் தொற்று மாதிரி ஆய்வுகள் (CHIMs) என்றும் அழைக்கப் படுகிறது.
கட்டுப்படுத்தப்பட்ட முறையில் குறிப்பிட்ட நோய்க் கிருமிகளால் ஆரோக்கியமானத் தன்னார்வலர்களை வேண்டுமென்றே மிகவும் வெகுவாக பாதிப்படையச் செய்து, அந்த நோய்ப் பாதிப்பின் அதிகரிப்பு மற்றும் கடத்தி-நோய்க் கிருமி இடையேயான தொடர்புகள் மற்றும் புதியத் தடுப்பு மருந்துகளின் செயல்திறனை நன்கு மதிப்பிடச் செய்தல் ஆகிய பலவற்றினை இது உள்ளடக்கியது.
மரபு வழியிலான மிகப் பெரிய அளவில் மாதிரிகளைச் சேகரித்து மேற்கொள்ளப்படும் சில மருத்துவப் பரிசோதனைகளுடன் ஒப்பிடும் போது இந்த ஒரு முறையானது, விரைவான மற்றும் மிகவும் செலவு குறைந்த விளைவுகளை வழங்குகிறது.