TNPSC Thervupettagam

கட்லாஸ் எக்ஸ்பிரஸ் நடவடிக்கை

February 11 , 2019 2116 days 597 0
  • வருடாந்திர பன்னாட்டு கடற்படைக் கூட்டுப் பயிற்சியான “கட்லாஸ் எக்ஸ்பிரஸ்” 2019ம் ஆண்டு ஜனவரி 27 முதல் பிப்ரவரி 6 வரை நடத்தப்பட்டது.
  • இது வருடாந்திர பன்னாட்டு கடற்படைக் கூட்டுப் பயிற்சியின் 8வது பதிப்பாகும். இது டிஜிபவுட்டி, மொசாம்பிக் மற்றும் செசல்ஸ் ஆகிய நாடுகளின் அருகாமையில் நடத்தப்பட்டது.
  • ஐ.என்.எஸ் திரிகாந்த் என்ற கப்பலோடு இந்தியக் கடற்படை இந்தப் பயிற்சியில் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டது.
  • இப்பயிற்சி இந்தியப் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் சட்ட அமலாக்கத்தின் திறனை மேம்படுத்துவது, பிராந்தியப் பாதுகாப்பை மேம்படுத்துவது, சட்ட விரோதமான கடற்பயண நடவடிக்கைகளில் தலையிடும் பொருட்டு அதில் ஈடுபடும் நாடுகளின் ஆயுதப் படைகளுக்கிடையே இணைந்து செயலாற்றும் தன்மையை அதிகப்படுத்துவது ஆகிய காரணங்களுக்காக நடத்தப்பட்டது.
  • இந்த வருடாந்திர கட்லாஸ் எக்ஸ்பிரஸ் பயிற்சி அமெரிக்க ஆப்பிரிக்கக் கட்டுப்பாட்டுப் பிரிவால் ஆதரவளிக்கப்பட்டு ஆப்பிரிக்கக் கடற்படைகளால் நடத்தப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்