தமிழக அரசானது, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், ‘கணித்தமிழ் 24’ எனப்படும் மூன்று நாட்கள் அளவிலான மாநாட்டினை சென்னையில் நடத்த உள்ளது.
இயல்பான மொழியினை செயல்முறைக்கு உட்படுத்துதல், செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழிக் கற்றல் செயல்பாட்டு நிரல்கள், இயந்திர வழி மொழிபெயர்ப்பு நிரல்கள், உணர்வுப் பகுப்பாய்வு, பெரிய அளவிலான மொழி மாதிரிகள் மற்றும் உரையினைத் தானியங்கு முறையில் அடையாளம் காணுதல் ஆகியவற்றில் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆராய்ச்சியில் பல்வேறு சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து இந்த மாநாட்டில் விரிவான அளவில் விவாதிக்கப் பட உள்ளது.
1999 ஆம் ஆண்டில் மு. கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது தமிழ் வழி கணினிச் செயல்முறை பற்றிய முதல் மாநாடு ஆனது நடத்தப்பட்டது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு அதே போன்ற இரண்டாவது தமிழ்வழிக் கணினி செயல் முறை மாநாடானது ஏற்பாடு செய்யப்பட உள்ளது.