மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பறவைப் பண்ணைகள் மற்றும் செல்லப்பிராணிப் பூங்காக்களில் கண்கவர் (அயல்நாட்டு) விலங்குகளை காட்சிப் படுத்தச் செய்வதற்கு தமிழ்நாடு வனத்துறை தடை விதித்துள்ளது.
தமிழ்நாட்டில் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடும் தனியார் துறை நடத்தும் பறவைப் பண்ணைகள் மற்றும் செல்லப் பிராணிப் பூங்காக்கள் அனைத்தும் தமிழ்நாடு வனத் துறையால் மூடப்படும்.
அயல்நாட்டு விலங்குகளைச் சேகரித்துக் காக்கும் தனியார் நிறுவனங்கள், சமீப காலம் வரையில் இந்திய விலங்குகள் நல வாரியத்திடமிருந்துப் பெறப்பட்ட ஒரு உரிமம் மூலம் அந்த விலங்குகளைக் காட்சிப் படுத்தி வந்தனர்.
அயல்நாட்டு விலங்குகள் என்பது CITES உடன்படிக்கையின் பிற்சேர்க்கைகள் I, II மற்றும் III ஆகியவற்றின் கீழ் பட்டியலிடப் பட்டவையாகும் என்பதோடு அவை 1972 ஆம் ஆண்டு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் IVவது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டுள்ளன.