TNPSC Thervupettagam

கண்காணித்தல் மற்றும் அடையாளம் காணல் செயல்முறை

December 30 , 2024 23 days 50 0
  • சரக்கு மற்றும் சேவை வரிச் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட கண்காணித்தல் மற்றும் அடையாளம் காணல் செயல்முறையில் சேர்க்கப்பட்டுள்ள முதல் தயாரிப்புகளில் சிகரெட்டும் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுவதோடு, பான் மசாலா பொருட்களும் இதில் உட்சேர்க்கப்படுவதற்கான பரிசீலனையில் உள்ளது.
  • இது ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஐக்கியப் பேரரசு மற்றும் துருக்கி போன்ற பிராந்தியங்களில் பயன்பாட்டில் உள்ளது.
  • இதற்கு அதன் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகச் சங்கிலி நிறுவனங்கள் போன்றவை பதிவு செய்து, தனித்துவ அடையாள அட்டைகளைப் பெற வேண்டும்.
  • உற்பத்தி அல்லது இறக்குமதி முதல் சில்லறை விற்பனை வரையிலான ஒவ்வொரு கட்டத்திலும் பொருட்கள் முறையாக சோதனை செய்யப்பட்டு மின்னணு முறையில் கண்காணிக்கப் படுகின்றன.
  • இந்தியாவில், இந்தச் செயல்முறையானது தனித்துவ அடையாளக் குறியிடலை (UIM) பயன்படுத்துகிறது.
  • விநியோகச் சங்கிலி முழுவதும் இந்தப் பொருட்களைக் கண்டறிவதற்காக வேண்டி, தயாரிப்புகள் அல்லது பொதிகளில் இந்த UIM பொருத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்