TNPSC Thervupettagam

கண்சவ்வழற்சி இல்லா நாடு

December 10 , 2017 2414 days 721 0
  • 2014-17ஆம் ஆண்டிற்கான தேசிய கண்சவ்வழற்சி (Trachoma) கணக்கெடுப்பு அறிக்கையின்படி, இந்தியா தற்போது கண்சவ்வழற்சி தொற்று இல்லா (Trachoma Free) நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கண்சவ்வழற்சியானது ஓர் நாள்பட்ட கண் தொற்றாகும்.
  • இளங் குழந்தைகளை தாக்கும் இது கண் விழி வெளிப்படலத் திரையின் குருட்டுத் தன்மைக்கு முக்கிய காரணமாகும்.
  • மோசமான தனிப்பட்ட மற்றும் சுற்றுப்புற சுகாதாரமின்மை காரணமாகவும், போதாக்குறையுடைய தண்ணீர் மற்றும் சுகாதார அணுகுதல்களாலும் கண்விழித்திரை பாதிப்படைந்து கண் சவ்வழற்சி நோய் உண்டாகின்றது.
  • இந்த அறிக்கையின் படி, உலக சுகாதார நிறுவனத்தின் தொற்று அளவு வகைப்பாட்டைக் காட்டிலும், நம் நாட்டில் வெறும் 0.7 சதவீத கண்சவ்வழற்சி தொற்றே நிலவுவதால் இந்தியா கண்சவ்வழற்சி தொற்று அற்ற நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி, பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 5 சதவீதத்துக்கும் குறைவாக செயல்தன்மையுடைய கண்சவ்வழற்சி தொற்று நிலவினால், அந்நாட்டில் செயல்தன்மையுடைய கண் சவ்வழற்சி நோய் ஒழிக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படும்.
  • கண் சவ்வழற்சியானது நாட்டில் சில பகுதிகளில் அதாவது இராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேசம், நிக்கோபர் தீவுகள் ஆகிய பகுதிகளில் வாழும் மக்களை பாதித்துள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது.
  • இந்த கணக்கெடுப்பு அறிக்கையானது, இனி செயல்தன்மையுடைய கண் சவ்வழற்சி நோய் இந்தியாவில் பொது சுகாதார பிரச்சனையல்ல என்பதைக் குறிப்பிடுகின்றது.
  • மேலும் இதன் மூலம் தற்போது உலக சுகாதார நிறுவனத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள GET 2020 திட்டத்தின் கீழ் உள்ள கண்சவ்வழற்சிக்கான ஒழிப்பு இலக்கை இந்தியா அடைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்