கண்டம் விட்டு கண்டம் இடம்பெயர்ந்த ஆர்க்டிக் நரி
July 7 , 2019
1970 days
694
- ஒரு இளம் நரி, அதன் வாழ்விடமான நார்வேயிலிருந்து கனடாவிற்கு இடம் பெயர்ந்துள்ளது. இது 2175 மைல்கள் தூரத்தை 76 நாட்களில் கடந்துள்ளது.
- இந்தப் பகுதிகள் பருவகாலக் கடற்பனியினால் சூழப்பட்டுள்ளன. ஆர்க்டிக் பெருங்கடலின் உறைந்த பகுதிகளில் அந்த நரி பயணித்து தனது பயணத்தை நிறைவு செய்துள்ளது.
- நார்வேயின் துருவ நிறுவன ஆய்வின்படி, இது போன்ற மிக விரைவாக கண்டம் விட்டு கண்டம் சென்ற விலங்கின் பயணம் குறித்து எதுவும் ஆவணப் படுத்தப்படவில்லை.
- உணவுப் பற்றாக்குறை மற்றும் ஒரு புதிய வாழ்விடம் ஆகியவற்றிற்காக இந்தப் பயணம் நிகழ்ந்திருக்கக் கூடும்.
Post Views:
694