TNPSC Thervupettagam

கண்ணீர் சிந்தும் பாம்பு - கண்டுபிடிப்பு

February 19 , 2019 1978 days 709 0
  • அருணாச்சலப் பிரதேசத்தின் லெபா-ரடா மாவட்டத்தில் “கண்ணீர் சிந்தும் பாம்பு” என்ற புதிய இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் புதிய நச்சுத் தன்மையற்ற கண்ணீர் சிந்தும் பாம்பின் (ஹெபியஸ் லேக்ரிமா) கண்டுபிடிப்பானது நியூசிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் விலங்கு வகைப்பாட்டிற்கான மிகப்பெரிய அறிவியல் பத்திரிக்கையான “சூடேக்ஸா” என்ற பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
  • “கண்ணீர் சிந்தும் பாம்பு” என்பது பாம்பின் கண்ணுக்கு கீழே இருக்கும் கருத்த பகுதியைக் குறிப்பிடுகின்றது. இது பாம்பு கண்ணீர் சிந்துவது போன்ற மாயத் தோற்றத்தைக் குறிப்பிடுகின்றது.
  • சர்வதேச அளவில் இதுவரையில் கண்டறியப்பட்டுள்ள பாம்பினங்கள் மொத்தம் 3709 ஆகும்.
  • அவற்றில் சுமார் 110 இனங்கள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்தவை. அதிலும் அருணாச்சலப் பிரதேசத்தில் மட்டும் 55 வகை பாம்பு இனங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்