புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய கலை மையம் (Indra Gandhi National Centre for the Arts - IGNCA) ஆனது மூன்று நாள் நடைபெற உள்ள ‘கதாகர் சர்வதேச கதை சொல்லிகள் திருவிழாவின்’ ஏழாவது பதிப்பை தொடங்கியுள்ளது.
மத்திய கலாச்சார அமைச்சகத்தோடு இணைந்து இந்திராகாந்தி தேசிய கலை மையம் (Indira Gandhi National Centre for the Arts- IGNCA) இத்திருவிழாவை நடத்துகின்றது.
கதாகர் திருவிழாவானது இந்தியாவில் நடைபெறும் ஒரே வாய்மொழி வழியிலான கதை சொல்லும் திருவிழாவாகும்.
இது 2010-இல் யுனெஸ்கோவின் கீழ் தொடங்கப்பட்ட கும்மக்காட் நரேன் எனும் பயண இலக்கிய திருவிழாவின் ஒரு பகுதியாகும்.
கதை சொல்லும் கலையை பாதுகாப்பதோடு அக்கலைக்கு புதிய பார்வையாளர்களை உருவாக்குவதே இத்திருவிழாவின் நோக்கமாகும்.