TNPSC Thervupettagam

கத்தாரின் தொழிலாளர் விதிகளில் மாற்றம்

September 7 , 2020 1449 days 663 0
  • தொழிலாளர்கள் தற்போதைய பணியிலிருந்து மாறுவதற்கு முன்பு தற்போதைய முதலாளியிடமிருந்து அவர்கள் கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என்ற ஒரு விதியை கத்தார் நீக்கியுள்ளது.
  • இது கபாலா முறை அல்லது தடையில்லாச் சான்றிதழ் முறை என்றறியப் படுகின்றது. இது இடம்பெயர்வுத் தொழிலாளர்கள் பணி மாறுவதற்கு முன்பு தங்களது முதலாளியிடம் அனுமதி பெற வழிவகை செய்கின்றது.
  • கபாலா முறை என்பது வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களை நடத்துவது குறித்து விதிகளை வகுக்கும் ஒரு முறையாகும்.
  • கபாலா என்பது அரபி மொழியில் உத்தரவாதம் அளித்தல்அல்லதுஅவர்களைப் பாதுகாத்தல்என்பதைக் குறிக்கும்.
  • மேலும், இது குறைந்தபட்ச ஊதியத்தை 25% ஆக, அதாவது $274 அல்லது 1000 கத்தாரி ரியால்களாக அதிகரித்துள்ளது.
  • கத்தார் நாடானது 2022 ஆம் ஆண்டு பிபா உலகக் கோப்பையை நடத்துகின்றது (FIFA World Cup). அதற்கான கட்டுமானப் பணிகளுக்காக வேண்டி இது மிகப்பெரிய அளவில் அயல்நாட்டுப் பணியாளர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது.
  • இந்த விதிமுறை வளைகுடா ஒத்துழைப்பு ஆணைய உறுப்பு நாடுகளான பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அரபு நாடுகளான ஜோர்டான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளிலும் நடைமுறைப் படுத்தப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்