TNPSC Thervupettagam

கந்தமர்தன் மலைத்தொடர் பல்லுயிர்ப் பாரம்பரியத் தளம்

April 4 , 2023 473 days 257 0
  • ஒடிசா அரசானது, பர்கர் மற்றும் பலங்கிர் மாவட்டத்தில் உள்ள கந்தமர்தன் மலைத் தொடரைப் பல்லுயிர்ப் பாரம்பரியத் தளமாக (BHS) அறிவித்துள்ளது.
  • கந்தமால் மாவட்டத்தில் உள்ள மண்டசுரு பள்ளத்தாக்கு மற்றும் கஜபதி மாவட்டத்தில் உள்ள மகேந்திரகிரி மலைத்தொடருக்கு அடுத்ததாக இது ஒடிசாவின் மூன்றாவது பல்லுயிர்ப் பாரம்பரியத் தளம் ஆகும்.
  • ஃபிகஸ் கான்கினா வார் டாசிகார்பா எனப்படும் ஒரு விதையுறைத் தாவரம் மற்றும் பியூசெட்டியா ஹரிசங்கரென்சிஸ் என்ற ஒரு சிலந்தி இனம் ஆகியவை இந்தப் பகுதி மலையில் மட்டுமே காணப் படுகின்றன.
  • இந்த மலையின் வடக்குச் சரிவில் அமைந்துள்ள நருசிங்கநாத் கோயில் மற்றும் மலை அடிவாரத்தின் தெற்குச் சரிவில் அமைந்துள்ள ஹரிசங்கர் கோயில் போன்ற இரண்டு வரலாற்று நினைவுச் சின்னங்கள் இங்கு அமைந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்