TNPSC Thervupettagam

கன உலோக மாசுக்கள் - இந்திய நதிகள்

December 16 , 2019 1809 days 870 0
  • மத்திய நீர் ஆணையமானது மொத்தம் 442 மேற்பரப்பு நீர் மாதிரிகளை சேகரித்தது. அவற்றில் 287 மாதிரிகள் கன உலோகங்களால் மாசுபட்டுள்ளன.
  • 156 மாதிரிகளில் பாதுகாப்பு அளவுகளுக்கு அதிகமாக (மோசமான நிலையில்) காணப்பட்ட மிகவும் பொதுவான கன உலோகம் இரும்பு ஆகும்.
  • ஈயம், நிக்கல், குரோமியம், காட்மியம் மற்றும் செம்பு ஆகியவை அதில் காணப்பட்ட மற்ற உலோகங்களாக இருந்தன.
  • ஆர்சனிக் மற்றும் துத்தநாகம் ஆகிய இரண்டு நச்சு உலோகங்களின் செறிவானது எப்போதும் வரம்பிற்குள்ளேயே  காணப்படுகின்றன.
  • கன உலோக மாசுபாட்டின் முக்கிய ஆதாரங்களானவை – சுரங்கத் தொழில்கள், அரைக்கும் இயந்திரங்கள், முலாம் பூசும் தொழில்கள் ஆகியனவாகும். அவை பல்வேறு வகையான நச்சு உலோகங்களை வெளியேற்றிச் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை  ஏற்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்