சமீபத்தில், அறிவியல் ஆய்வாளர்கள் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோக்களைக் கண்டறிவதற்கு என மத்தியத் தரை கடலுக்கு அடியில் 2 தொலைநோக்கிகளை நிலை நிறுத்தியுள்ளனர்.
இது பேரண்டத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தக் கூடிய பேய்த் துகள்கள் என்றும் அழைக்கப் படும் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோக்களை ஆய்வு செய்வதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடலுக்கு மிகவும் அடியில் உள்ள இந்த நியூட்ரினோ தொலைநோக்கிகள் IceCube என்ற ஆய்வகத்தினை விட திறம் மிக்கதாக இருக்கும்.
நியூட்ரினோக்கள் அவை வானியல் தூரத்தை இடையூறு ஏதும் இல்லாமல் பயணிக்கக் கூடிய, பலவீனமான தொடர்பு கொள்ளும், அணுக்களின் துணைநிலை துகள்களாகும்.