இரண்டு சுண்ணாம்புப் பாறை இருப்பு தொகுதிகளை வெற்றிகரமாக ஏலம் எடுத்ததன் மூலம் கனிம ஏலக் கட்டமைப்பில் இணைந்த 14வது மாநிலமாக தெலுங்கானா மாறி உள்ளது.
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) (MMDR) திருத்தச் சட்டம், 2015 ஆனது இந்தக் கட்டமைப்பு குறித்து முதன் முதலில் வரையறுத்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஏலங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சுரங்க ஏலக் கட்டமைப்பில் இணைந்த மற்ற மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய இதரப் பகுதிகளில் முக்கியமான கனிமங்களுக்கான ஏலங்களை மத்திய அரசு நடத்தியது.
மிகவும் முக்கியமான மற்றும் பெருமளவிலான கனிமங்கள் உட்பட, 13 மாநிலங்களில் மொத்தம் 81 கனிமத் தொகுதிகள் ஏலம் விடப்பட்டுள்ளன.