மத்திய அரசானது,சமீபத்தில் கனிம ஏல விதிகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது.
இது முன்பணத்திற்கான வரம்பினை 500 கோடி ரூபாயாக நிர்ணயிப்பதோடு, துணை நிறுவனங்கள் ஒரே கனிமத் தொகுதியினை ஏலம் கோருவதில் இருந்து தடுக்கிறது.
ஒரு ஏலதாரர் ஒரு கனிமத் தொகுதியின் ஏலத்தில் ஒரு ஏலத்திற்கான கோரிக்கையை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
ஏலதாரரின் எந்தவொரு துணை நிறுவனமும் அதே ஏலத்தில் மற்றொன்றைச் சமர்ப்பிக்கக் கூடாது.
ஒரு துணை நிறுவனம் என்பது ஏலத்தில் மற்றொரு ஏலதாரரின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நபர் (அல்லது நிறுவனம்) என வரையறுக்கப்படுகிறது.
இந்த விதிகள் மாநில அரசாங்கங்கள் கனிம ஆய்வு உரிமங்களை (EL) வழங்குவதற்கும் வழி செய்கிறது.
கனிம ஆய்வு உரிமங்களை மாநிலம் மற்றும் மத்திய அரசும் ஏலம் எடுக்கலாம்.
500 சதுர கிலோமீட்டருக்கு மேலான (ச.கி.மீ), ஆனால் 1000 சதுர கிலோ மீட்டருக்கு குறைவான அல்லது அதற்கு சமமானத் தொகுதிகளுக்கான கனிம ஆய்வு உரிமத்திற்கான செயல்பாட்டு பிணைத் தொகை 2 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.