கனிமவளம் நிறைந்த நிலங்களுக்கு வரி விதிக்க வகை செய்யும் ஒரு மசோதாவை தமிழ்நாடு சட்டசபை ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் மூலம் தனது வருவாயைப் பெருக்கிக் கொள்ளவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஏழாவது அட்டவணையின் இரண்டாவது பட்டியலின் 49வது உட்சேர்ப்பின் கீழ் கூறப்படும் 'நிலங்கள்' என்ற விளக்கத்திற்குள் கனிம வளம் நிறைந்த நிலம் அடங்கும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
சுரங்கங்கள் மற்றும் கற்குவாரிகளை உள்ளடக்கிய நிலங்களுக்கு வரி விதிக்க மாநில சட்டமன்றங்களுக்கு 29வது சரத்தின் கீழ் சட்டப்பூர்வமான தகுதி உள்ளது.