TNPSC Thervupettagam

கனிமங்களின் மறுவகைப்பாடு

February 24 , 2025 2 days 37 0
  • சுரங்கத் துறை அமைச்சகம் ஆனது, பாரைட்டுகள் (பாரிய கந்தகை), ஃபெல்ட்ஸ்பார் (களிக்கல்), மைக்கா மற்றும் குவார்ட்ஸ் ஆகியவற்றை "முக்கியக் கனிமங்கள்" ஆக வகைப்படுத்தியுள்ளது.
  • தற்போதுள்ள கனிம அகழ்வு ஒப்பந்தங்களை மேலும் 50 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் இந்த நடவடிக்கையானது, தற்போது முக்கியமான அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பயன்பாடுகளுக்காக அவற்றை வெட்டி எடுக்க அனுமதிக்கிறது.
  • இந்தச் சுரங்கங்கள் மிகப் படிப்படியாக இந்தியச் சுரங்க வாரியத்தில் பதிவு செய்யப் பட்டு முக்கியக் கனிமங்களாக ஒழுங்குமுறைப்படுத்தப்பட வேண்டும்.
  • குவார்ட்ஸ், ஃபெல்ட்ஸ்பார் மற்றும் மைக்கா ஆகியவை பெக்மாடைட் பாறைகளில் காணப் படுகின்றன.
  • அவை பெரைல், லித்தியம், நியோபியம், டான்டலம், மாலிப்டினம், டின், டைட்டானியம் மற்றும் டங்ஸ்டன் போன்ற பல முக்கிய கனிமங்களின் முக்கிய ஆதாரமாகும்.
  • மின்சார வாகனங்கள், ஆற்றல் மாற்றத் துறை, விண்கலத் தொழில்துறைகள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு தொடர்பான தொழில்நுட்பங்களில் இம்முக்கியக் கனிமங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
  • தற்போது வரை, குவார்ட்ஸ், ஃபெல்ட்ஸ்பார் மற்றும் மைக்கா சுரங்கங்களுக்கான ஏலக் குத்தகைகள் சிறு கனிம ஏலக் குத்தகைகளாக வழங்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்