TNPSC Thervupettagam

கனிமங்கள் கொண்ட நிலங்கள் மீதான புதிய வரி 2025

April 12 , 2025 8 days 66 0
  • கனிமங்கள் கொண்ட நிலங்கள் புதிய வரி அறிமுகப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் 2,400 கோடி ரூபாய் கூடுதல் வருவாயை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • தமிழ்நாடு மாநில அரசானது, கனிமங்கள் கொண்ட நிலங்கள் மீது வரி விதிப்பதற்கும் அவற்றை வசூலிப்பதற்கும் "தமிழ்நாடு கனிமங்கள் கொண்ட நில வரிச் சட்டம், 2024" என்ற ஒரு புதிய சட்டத்தை இயற்றியுள்ளது.
  • இச்சட்டம் மற்றும் விதிகளின்படி, 32 கனிமங்களுக்கு கனிமங்கள் கொண்ட நில வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • பெரிய மற்றும் சிறியக் கனிமங்களின் குத்தகைதாரர்கள் ஏப்ரல் 04 ஆம் தேதி முதல் கனிம நில வரியைச் செலுத்த வேண்டும்.
  • சில்லிமனைட்டுக்கு அதிகபட்சமாக டன்னுக்கு 7,000 ரூபாய் வரித் தொகையும் மற்றும் வெண் களிமண்ணுக்கு மிக குறைந்த பட்சமாக டன்னுக்கு 40 ரூபாய் வரித் தொகையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்