மேற்கு வங்க அரசானது பெண்கள் நல முதன்மைத் திட்டமான கன்யாஸ்ரீ திட்டத்தின் வருடாந்திர குடும்ப வருமான உச்ச வரம்பினை நீக்கியதன் மூலம் அனைவருக்கும் இத்திட்டத்தினை விரிவுபடுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் படி, 13 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண் குழந்தைகளில் 18 வயது வரை திருமணமாகாமல் இருப்பின், நிதி உதவியை பெறுவர்.
கன்யாஸ்ரீ திட்டம் 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினரிடையே நிகழும் குழந்தைத் திருமணத்தை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் படி வருடாந்திர குடும்ப வருமானம் 1.2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தின் மூலம் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 13 முதல் 18 வயது வரை ஒவ்வொரு ஆண்டும் 1000 ரூபாய் நிதி உதவியைப் பெறுவர். 13 வயது முதல் எஞ்சியுள்ள 18வயது வரை திருமணமாகாமல் இருந்தால், ஒரு முறை மானியத் தொகையான 25,000 ரூபாயை இத்திட்டத்தின் மூலம் பெறுவர்.