கேரளாவின் மடிக்கை பஞ்சாயத்தில் உள்ள கன்ஹிராபோயில் என்ற இடத்தில் சில பெருங்கற்காலச் சான்றுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஒரு தனியார் நிலத்தில் உள்ள பாறையில் செதுக்கப்பட்ட, வரலாற்றுக்கு முந்தைய 24 இணை காலடித் தடங்களும் மனித உருவமும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வரலாற்று வல்லுநர்கள் இந்த வேலைப்பாடுகள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவை என்று கருதுகின்ற நிலையில் இது பண்டையக் கலாச்சாரத்தின் ஒரு சுவாரஸ்யமான கண்ணோட்டத்தினை வழங்குகிறது.
இந்த வேலைப்பாடுகள் ஆனது, கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அவலக்கி பேராவில் காணப்படும் வரலாற்றுக்கு முந்தையப் பாறைக் கலைகளுடன் ஒரு சில ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.