TNPSC Thervupettagam

கபோ வெர்டே - மலேரியா பாதிப்பற்ற நகரம்

January 19 , 2024 182 days 209 0
  • உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது, மலேரியா பாதிப்பற்ற நாடாக கபோ வெர்டே (கேப் வெர்டே) நாட்டிற்கு சான்றளித்துள்ளது.
  • எனவே, உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் இந்த அந்தஸ்தைப் பெறும் மூன்றாவது நாடாக இது மாறியுள்ளது.
  • 1973 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் முறையே இந்தச் சான்றிதழ் பெற்ற மொரிஷியஸ் மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்த நாடு தற்போது இணைந்து உள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் உலகளாவிய மலேரியா பாதிப்புகளில் சுமார் 95 சதவீதப் பங்கு மற்றும் மலேரியா தொடர்புடைய உயிரிழப்புகளில் 96 சதவீதப் பங்குடன் ஆப்பிரிக்காவில் அதிக மலேரியா பாதிப்பு உள்ளது.
  • உலக சுகாதார அமைப்பு ஆனது, இதுவரை 43 நாடுகள் மற்றும் 1 பிரதேசத்திற்கு ‘மலேரியா பாதிப்பற்ற நாடு’ என்ற சான்றிதழை வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்