TNPSC Thervupettagam

கப்பற் படைத் துணைத் தலைவரான எம்பி அவாதி காலமானார்

November 13 , 2018 2124 days 600 0
  • இந்தியக் கப்பற் படை வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்தவரான கப்பற்படைத் துணைத் தலைவர் மனோகர் பிரகலத் அவாதி, மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் தனது சொந்த கிராமமான வின்ச்சுருணியில் காலமானார்.
  • இவர் இந்தியக் கப்பற்படையின் உலகத்தை சுற்றி வரும் சாகசங்களை நிகழ்த்துவதன் தந்தை என்றறியப்படுகிறார்.
  • 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போரில் இந்தியாவின் சார்பாக கிழக்கு பிராந்தியப் கப்பற்படைப் பிரிவை அவர் வழிநடத்தினார். இந்தப் போரில் எதிரி நாட்டின் நீர்மூழ்கிக் கப்பலை வீழ்த்துவதற்கு இவரது நடவடிக்கைகள் உதவிகரமானதாக இருந்தன.
  • இவர் 1971 ஆம் ஆண்டின் போரில் ஐஎன்எஸ் கம்மோர்தா கப்பலின் தலைமை அதிகாரியாக சிறப்பாகப் பணியாற்றியதைக் கௌரவிப்பதற்காக 1972 ஆம் ஆண்டில் வீர் சக்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
  • 2007 ஆம் ஆண்டில் “சாகர் பராக்கிரமம் ” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார். சாகர் பராக்கிரமம் என்பது இந்தியத் தயாரிப்பு பாய்மரப் படகுகளில் தனியாக உலகம் முழுவதும் பயணம் மேற்கொள்வதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்