மக்களவையானது, 2024 ஆம் ஆண்டு கப்பல் சரக்குப் போக்குவரத்து மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
இது காலனித்துவ கால 1856 ஆம் ஆண்டு சட்டத்திற்கு மாற்றாக, கப்பல் போக்குவரத்து ஆவணங்களுக்கான சட்டப்பூர்வக் கட்டமைப்பைப் புதுப்பித்து எளிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சீர்தர ரத்து மற்றும் சேமிப்பு விதியைச் சேர்ப்பதன் மூலம் அச்சட்டத்தினைச் செயல் படுத்துவதை எளிதாக்குவதற்கான பல வழிமுறைகளை வெளியிடுவதற்கென மத்திய அரசிற்கு இது அதிகாரம் அளிக்கிறது.
கப்பல் ஏற்றுமதி ஒப்பந்தச் சீட்டு என்பது ஒரு சரக்குப் போக்குவரத்து நிறுவனங்கள், ஒரு கப்பல் சார் சரக்கு ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஒரு ஆவணத்தைக் குறிக்கிறது.
இது கொண்டு செல்லப்படும் பொருட்களின் வகை, அளவு, நிலை மற்றும் சேருமிடம் போன்ற விவரங்களைக் கொண்டுள்ளது.