ஒன்றிய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தென் மண்டலக் கலாச்சார மையம் (SZCC) ஆனது, 'கம்ப இராமாயண' பாராயணங்களின் வாய்மொழி மரபையும் அதன் பரந்த கலாச்சாரத் தாக்கத்தையும் புதுப்பிக்கும் நோக்கில் ஒரு விரிவான முன்னெடுப்பினைத் தொடங்குகிறது.
கம்பரின் பிறப்பிடமான மயிலாடுதுறை மாவட்டத்தின் தேரழுந்தூரில் உள்ள கம்பர் மேடுவில் ஒரு வார கால விழாவை நடத்த அது திட்டமிட்டுள்ளது.
இந்தத் திருவிழாவில் 'கம்ப இராமாயணத்தின்' தொடர்ச்சியான சில பாராயணங்கள், நடன நாடகங்கள் மற்றும் அறிவார்ந்த விவாதங்கள் இடம் பெறும்.